தங்கை திடீர் மரணம்... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி துயரம்; ரசிகர்கள் அதிர்ச்சி

ஷாகித் அப்ரிடி
ஷாகித் அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியின் தங்கை காலமானதை அடுத்து, இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி பங்கேற்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

சாஹின் அப்ரிடி
சாஹின் அப்ரிடி

தங்கையின் மரணம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி வெளியிட்டுள்ள பதிவில், ”இறைவனிடமிருந்தே நாம் வந்திருக்கிறோம். மீண்டும் இறைவனிடமே செல்கிறோம். கனத்த இதயத்துடன் இதை கூறுகிறேன். என்னுடைய பாசமிக்க சகோதரி, தற்போது காலமாகிவிட்டார். அவருக்கான ஜானஸா தொழுகை ஜக்கரியா பள்ளிவாசலில் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

அப்ரிடிக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அப்ரிடியின் நெருங்கிய உறவினரான சாஹின், இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பாரா? அல்லது இங்கேயே போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பாரா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in