விராட் கோலி
விராட் கோலி

விராட் கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்... குஜராத் மைதானத்தில் தீவிர கண்காணிப்பு; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published on

பயங்கரவாதிகளால் விராட் கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானதால், பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி இன்று குஜராத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

விராட் கோலி
விராட் கோலி

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பயிற்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்டவை திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும், மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விராட் கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், ஆர்சிபி அணி பயிற்சியை ரத்து செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களை சந்திக்க முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விஜய்குமார் ஜ்வாலா என்ற குஜராத் காவல்துறை அதிகாரி கூறுகையில்,"அகமதாபாத்திற்கு வந்த பிறகு விராட் கோலி பயங்கரவாதிகள் என்ற சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்துள்ளார். விராட் கோலி நாட்டிற்கே பொக்கிஷம், அவருடைய பாதுகாப்பே எங்களது அதிகபட்ச முன்னுரிமை. மேலும், ஆர்சிபி இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவே பயிற்சிகள் ஏதும் இருக்காது என்று எங்களிடம் தெரிவித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

கோலி
கோலி

முன்னதாக, கடந்த மே 20ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த இடத்தை சோதனை செய்த போது, ஆயுதங்கள், சந்தேகத்திடமான வீடியோ மற்றும் மெசேஜ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அணிகளின் நிர்வாகங்களுக்கும் குஜராத் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

x
காமதேனு
kamadenu.hindutamil.in