ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டி… முதல் விக்கெட்டை இழந்தது தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

தொடக்க வீரர்களாக டி காக், பவுமா களமிறங்கினர். இதில், 4 பந்துகளை சந்தித்த பவுமா ஆகி வெளியேறி அணியினருக்கு அதிர்ச்சிக் கொடுத்தார்.

ஈடன் கார்டன் மைதானத்தை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்யும் அணியே அதிகம் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், தென்னாப்பிரிக்க அணியும் இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் விளையாடி வருகிறது. இந்த புள்ளி விவரங்கள் அனைத்தையும் அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலியா எப்படி எதிர்கொள்ள உள்ளது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும். மேலும், இன்றையப் போட்டியின் போது மழை குறுக்கிட்டால், நாளை போட்டியை தொடரவும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!

இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!

'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!

உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்

மகிழ்ச்சி... சிலிண்டர் விலை ₹ 57 குறைவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in