மகிழ்ச்சி... சிலிண்டர் விலை ₹ 57 குறைவு!

சிலிண்டர்
சிலிண்டர்

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டுப் பயன்பாடு மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்ந்தது. எனினும், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதையடுத்து  வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இம்மாதம் 1 ம்  தேதியன்று  எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதன்படி   19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டது. அதன் விலை ரூ.1,898-ல் இருந்து, ரூ.1,999-ஆக உயர்ந்தது.

இந்நிலையில், மகிழ்ச்சி செய்தியாக இன்று வணிக  சிலிண்டர் விலையை ₹  57 குறைத்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. வணிக சிலிண்டர் விலை  1999 ல் இருந்து ₹ 57 குறைக்கப்பட்டு 1942  ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் வீட்டு உபயோக சிலிண்டர்  விலை மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in