இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!

இயக்குநர் மணிவண்ணன், அவரது தங்கை
இயக்குநர் மணிவண்ணன், அவரது தங்கை

நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்ட மணிவண்ணனின் இருப்பு தமிழ் சினிமாவில் மிக முக்கியமானது. இயக்கம், நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என வலம் வந்தவர் தனது 59-வது வயதில் காலமானார். அவரது இறப்புக்கு குடிதான் காரணம் என்ற தகவல் பல வருடங்களாக வலம் வருகிறது. ஆனால், உண்மை காரணம் என்ன என்பது குறித்து அவரது தங்கை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த மணிவண்ணன், சினிமா ஆசையால் இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடிதம் எழுதி திரைத்துறைக்குள் நுழைந்தார். வசனம், திரைக்கதை, இயக்கம் என வலம் வந்தவர் பல படங்களில் தனது அட்டகாசமான நடிப்பாலும் ரசிகர்களின் மனங்களை வென்றார். பின்னர் 2013-ம் ஆண்டு உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவரின் மரணத்திற்கு அவரது குடிப்பழக்கம் தான் காரணம் என்று கூறப்பட்டது.

மணிவண்ணன்
மணிவண்ணன்

ஆனால்,அது உண்மையில்லை என மணிவண்ணனின் தங்கை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது அண்ணன் குடியால் இறக்கவில்லை. அவரது இறப்பிற்கு பல மாதங்கள் முன்பே குடியை நிறுத்திவிட்டார். அம்மா இறந்த துக்கத்தின் போது கூட தனது அண்ணன் குடிக்கவில்லை. 

2004-ம் ஆண்டு எனது அண்ணிக்கு புற்றுநோய் இருப்பது அண்ணனுக்கு தெரியவந்தது. அதுவும் கடைசி கட்டத்தில் காப்பாற்ற முடியாத நிலையில் இருந்ததால், இதனை யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டார்.

மணிவண்ணன் திருமணத்தின்போது...
மணிவண்ணன் திருமணத்தின்போது...

அவர் கடைசியாக கொடுத்த பேட்டியில் கூட கால் இடறி விழுந்து அடிபட்டு விட்டதால், இரண்டு மாதம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அண்ணியின் பிரிவை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறேன் என்ற மன உளைச்சலிலேயே இருந்தார். அதன் பின்புதான் உயிரிழந்தார். அண்ணன் இறந்த சில மாதங்களிலேயே அண்ணியும் இறந்துவிட்டார்” என மணிவண்ணன் தங்கை அவரது இறப்புக் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் மணிவண்ணன் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மரணம் குறித்து அவரது தங்கை கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in