ரோகித் ஷர்மாவின் மனைவி கிளப்பிய புதிய சர்ச்சை... பரபரப்பில் கிரிக்கெட் உலகம்!

மனைவியுடன் ரோகித் ஷர்மா
மனைவியுடன் ரோகித் ஷர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேசிய வீடியோ ஒன்றின் கீழ் ரோகித் ஷர்மாவின் மனைவி ரித்திகா பதிவிட்ட கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க் பவுச்சர், ரோகித் ஷர்மா
மார்க் பவுச்சர், ரோகித் ஷர்மா

ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் உள்ளன. இதில் மும்பை அணி ரோகித் ஷர்மாவின் தலைமையின் கீழ் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது.

இந்த சூழலில் நடப்பு சீசனுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக, மும்பை அணி டிரேடிங் முறையில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை வாங்கியது. மேலும், மும்பை அணியின் கேப்டனாகவும் நியமித்தது. இது, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாக மாறியது. மேலும், அந்த அணியின் ரசிகர்கள், அணி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தனர். சமூக வலைத்தளங்களில் அந்த அணியை பின் தொடர்வோரின் எண்ணிக்கையையும் சரசரவென குறைந்தது.

ஹர்திக் பாண்டியா, ரோகித் ஷர்மா
ஹர்திக் பாண்டியா, ரோகித் ஷர்மா

இந்நிலையில், ரோகித் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் சமீபத்தில் விளக்கமளித்திருந்தார். அதில், ரோகித்தை ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு, முழுக்க முழுக்க அணியின் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மட்டுமே என்றும், வேறு எந்த உள்நோக்கங்களும் இல்லை எனக் கூறியிருந்தார்.

அவர் ஓரிரு சீசன்களில் சரியாக விளையாடவில்லை, கேப்டன் பொறுப்பு மாற்றப்பட்டதால், இனி ரோகித் அழுத்தம் இன்றி தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தச் சுதந்திரமும் கிடைத்துள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

ரோகித் ஷர்மா, ரித்திகா பின்னூட்டம்
ரோகித் ஷர்மா, ரித்திகா பின்னூட்டம்

மேலும், இந்தியர்கள் இந்த விஷயத்தில் உணர்ச்சிவயப்பட்டவர்களாக உள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தை உணர்ச்சிப்பூர்வமாக அணுகாமல் அதனை கிரிக்கெட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வீடியோவிற்கு கீழே ரோகித் ஷர்மாவின் மனைவி ரித்திகா கமெண்ட் ஒன்றை பதிவு செய்தார். ‘இதில் பல விஷயங்கள் தவறாக உள்ளது’ என அந்த கமெண்டில் குறிப்பிட்டிருந்தார். இது இணையத்தில் மீண்டும் வைரலாகி பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ரித்திகா கமென்ட் செய்த அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in