பந்துவீச்சிலும் சாதனை... அஸ்வினை முந்தி ரோகித் சர்மா செய்த தரமான சம்பவம்!

பந்துவீச்சிலும் சாதனை... அஸ்வினை முந்தி ரோகித் சர்மா செய்த தரமான சம்பவம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த எக்கானமி கொண்ட பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மாவை உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஹிட்மேன் என்றும், ரன் மெஷின் என்றும் பட்டப் பெயர்கள் வைத்து அழைத்து வருகின்றனர். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரோகித் சர்மா. பேட்டிங் மட்டுமல்லாது தனக்கு பவுலிங்கும் வரும் என அவ்வப்போது ரோகித் சர்மா நிரூபித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 45 வது மற்றும் கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக ரோகித் சர்மா பந்து வீசி அசத்தினார். 5 பந்துகள் மட்டுமே வீசிய அவர், நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரரான தேஜா நிதமுன்னாரியின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் ரோகித் சர்மா படைத்துள்ள புதிய சாதனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு தொடரில் சிறந்த எக்கானமி கொண்ட பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடம்
நடப்பு தொடரில் சிறந்த எக்கானமி கொண்ட பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடம்

மொத்த போட்டியிலும் 5 பந்துகள் மட்டுமே வீசிய ரோகித் சர்மா ஒரு விக்கெட் எடுத்து 7 ரன்கள் வழங்கினார். இதன் மூலம் அவரது எக்கானமி 3.40 என்று உள்ளது. இதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறந்த எக்கனாமி கொண்ட பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலிக்கு 7வது இடம்
விராட் கோலிக்கு 7வது இடம்

அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 3.65, ஜஸ்ப்ரிட் பும்ரா 3.97, ரவீந்திர ஜடேஜா 3.97, முகமது நௌபி 4.13 புள்ளிகளுடனும் அடுத்தடுத்து உள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி 7வது இடத்தில் உள்ளார். இவரும் நேற்று நடந்த போட்டியில் 2 ஓவர்கள் வீசி ஒரு விக்கெர் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in