மரியாதையும் விசுவாசமும் கட்டளை போடுவதால் மட்டும் வராது... தலைமைப்பண்பு குறித்து தோனியின் அறிவுரை!

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

மரியாதையும் விசுவாசமும் கேப்டன் பதவியிலிருந்து கட்டளை போடுவதால் மட்டும் கிடைத்து விடாது. மரியாதையை இயற்கையாக பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

2007ல் டி20 உலகக் கோப்பை, 2011ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வடிவ போட்டிகளிலும் இந்திய அணிக்கு கோப்பைகளை வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. மேலும், அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5 முறை ஐபிஎல்-ல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி ’கூலான’ தனது தலைமைத்துவ பண்புக்காக அனைவராலும் அன்போடு பாராட்டப்படுகிறார். இதுதொடர்பாக சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய தோனி , "வீரர்களின் மரியாதையையும் விசுவாசத்தையும் சம்பாதிப்பது முதன்மையான தலைமைப் பண்பாக அமைந்துள்ளது. நீங்கள் டிரஸ்ஸிங் ரூமில் பேசும்போது, ​​துணை ஊழியர்கள் அல்லது வீரர்கள் உங்களை மதிக்காவிட்டால், அவர்களிடம் விசுவாசத்தைப் பெறுவது கடினம். இது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அல்ல. நீங்கள் உண்மையில் எதுவும் பேசாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் நடத்தைதான் மரியாதையை பெற்றுக்கொடுக்கும்.

எப்போதும் மரியாதையை சம்பாதிப்பது முக்கியம் என்று நான் கருதுவேன். ஏனெனில் அது உங்களுடைய நடத்தை சம்மந்தப்பட்டது. வீரர்களின் விசுவாசத்தைப் பெற அவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி அவர்களைப் பயன்படுத்தவேண்டும். சிலர் அழுத்ததை விரும்பலாம், சிலர் அழுத்தத்தை விரும்பமாட்டார்கள். ஒரு தலைவராக அனைவரது பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொள்வது முக்கியம்.

கிரிக்கெட் வீரர் தோனி
கிரிக்கெட் வீரர் தோனி

மரியாதையும் விசுவாசமும் கேப்டன் பதவியிலிருந்து கட்டளை போடுவதால் மட்டும் கிடைத்து விடாது. மரியாதையை இயற்கையாக பெற வேண்டும். அந்த வகையில் ஒரு முறை நீங்கள் இயற்கையான விசுவாசத்தை உருவாக்கி விட்டால், ஒரு தலைவன் சொல்வதை மிகச் சிறப்பாக வீரர்கள் செய்து முடிப்பார்கள். இப்படியான தலைவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in