என் மனைவியின் இமேஜை உடைக்காதீங்கப்பா ப்ளீஸ்... ரவீந்திர ஜடேஜா கதறல்!

மனைவி ரிவாபாவுடன்
ரவீந்திர ஜடேஜா. அடுத்தபடம்: அனிருத்சிங்
மனைவி ரிவாபாவுடன் ரவீந்திர ஜடேஜா. அடுத்தபடம்: அனிருத்சிங்

மனைவி ரிவாபாவின் பெயரைக் கெடுக்கவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான், தனது தந்தையின் பேட்டி என கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் ரவீந்திர ஜடேஜா, அவரது மனைவி ரிவாபா
பிரதமர் மோடியுடன் ரவீந்திர ஜடேஜா, அவரது மனைவி ரிவாபா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. டெஸ்ட், 1 நாள் மற்றும் டி20 என அனைத்து விதமாக போட்டிகளிலும் விளையாடி வரும் இவர், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆல்ரவுண்டராகவும் உள்ளார். இப்படி ஒரு பக்கம் இருக்க அவரது குடும்பத்திற்குள் நடக்கும் விஷயம் தற்போது பொதுவெளிக்கு வந்து விவாதப்பொருளாக மாறியுள்ளது. அதற்குக் காரணம் குஜராத்தில் உள்ள பிரபல பத்திரிக்கையில் வந்த ஒரு பேட்டி.

மனைவியுடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் அனிருத்சிங்.
மனைவியுடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் அனிருத்சிங்.

அதாவது ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் ஜடேஜாவின் பேட்டி ஒன்று வெளியானது. அதில். தனது மகன் ஜடேஜாவுக்கு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே தம்மை விட்டு பிரிந்து சென்றதாகவும், குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா அவரை ஏதோ மாயம் செய்து பிரித்துச் சென்று விட்டதாகவும் கூறியிருந்தார்.

ராமர் கோயில் திறப்பு விழாவில் ஜடேஜா தம்பதி
ராமர் கோயில் திறப்பு விழாவில் ஜடேஜா தம்பதி

மேலும், தான் ஜாம்நகரில் வசித்து வருகிறேன். ஜடேஜா தனியாக ஒரு பங்களாவில் வசிக்கிறார். ஒரே ஊரில் இருந்தும் இருவரும் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொள்வதில்லை. குடும்பத்தினர் யாருடனும் அவருக்கு நல்ல உறவு இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடைய பேத்தியைக் கூடத் தான் நேரில் பார்க்கவில்லை என அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்த பேட்டி இணையத்தில் பெரும் வைரலாகியது. அதற்கு பலர் பல்வேறுவிதமான கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், தந்தையின் குற்றச்சாட்டுக்களுக்கு எக்ஸ் வலைதளம் மூலமாக ஜடேஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

தந்தையுடன் ரவீந்திர ஜடேஜா, ரிவாபா
தந்தையுடன் ரவீந்திர ஜடேஜா, ரிவாபா

அந்த பதிவில், முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட அந்த பேட்டியில் கூறப்பட்டுள்ள எந்த தகவலும் உண்மை இல்லை. ஒரு தரப்பின் கருத்தை மட்டுமே அந்த பேட்டியில் வெளிப்பட்டுள்ளது. என் மனைவியின் மீதான இமேஜை உடைக்கவே இந்த செயல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். என் பக்க நியாயத்தை நான் வெளிப்படுத்துவேன். ஆனால், பொதுவெளியில் அல்ல என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in