அதிரடி காட்டிய தோனி, ரவீந்திர ஜடேஜா... லக்னோவுக்கு எதிராக 176 ரன்கள் குவித்த சென்னை அணி!

தோனி
தோனி

லக்னோவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 57 ரன்கள் அடித்துள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் தரப்பில் மிட்சல் மற்றும் தாக்கூர் நீக்கப்பட்டு தீபக் சாஹர் மற்றும் மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அதேபோல் லக்னோ அணி தரப்பில் மேட் ஹென்ரி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜடேஜா
ஜடேஜா

முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ஆட்டத்தில் 2வது ஓவரை வீச வந்த மோசின் கானின் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா போல்டாகி டக் அவுட்டானார். இதன்பின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களத்திற்கு வந்தார். இவர்கள் இருவரும் ஓரளவு அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் ருதுராஜ் 13 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் ரவீந்திர ஜடேஜா களம் புகுந்தார். சிஎஸ்கே அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக ஜடேஜா களமிறங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தோனி ஜடேஜா
தோனி ஜடேஜா

தொடர்ந்து ரஹானெ 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த ஷிவம் துபே 3 ரன்கள், சமீர் ரிஸ்வி 1 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மொயின் அலி அதிரடியாக் ஆடி 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தல தோனி லக்னோ பந்துவீச்சை துவம்சம் செய்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்களும், தோனி 9 பந்துகளில் 28 ரன்களும் எடுத்த ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ தரப்பில் அதிகபட்சமாக க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in