அஸ்வின் படைத்த அதிரடி சாதனை; பூரிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்

அஸ்வின்
அஸ்வின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய வீரர்களில் இங்கிலாந்திற்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி கடந்த 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஜெய்ஸ்வாலின் அதிரடி இரட்டை சதம் காரணமாக 396 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

499 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுக்களை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்
499 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுக்களை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை துவக்கி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 255 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

4-வது நாள் ஆட்டம் இன்று துவங்கிய நிலையில், இங்கிலாந்து வீரர்கள் ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் 499 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

அதேசமயம் மற்றொரு சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் இதன் மூலம் படைத்துள்ளார். இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியில் 96 விக்கெட்டுகளுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். 95 விக்கெட்களுடன் பி.எஸ், சந்திரசேகர் 2-வது இடத்திலும், 92 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே 3-வது இடத்திலும் உள்ளனர்.

கபில் தேவ், பி.எஸ்.பேடி ஆகியோர் தலா 85 விக்கெட்களுடன் 4-வது இடத்திலும், இஷாந்த் சர்மா 67 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஒரே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் என்பதால், அவரது சாதனை முறியடிக்கப்பட இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து வெற்றி பெற 205 ரன்கள் தேவை
இங்கிலாந்து வெற்றி பெற 205 ரன்கள் தேவை

இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9-வது வீரர் என்ற சாதனையைப் படைப்பார். இந்த பட்டியலில் 800 விக்கெட்டுகளுடன் இலங்கையின் முத்தையா முரளிதரன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 2-வது இடத்திலும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இந்தியாவின் அனில் கும்ப்ளே 619 விக்கெட் களுடன் 4-வது இடத்தில் நீடித்து வருகிறார். இதனிடையே இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in