ரோகித் ஷர்மா, ரவி சாஸ்திரி
ரோகித் ஷர்மா, ரவி சாஸ்திரி

இம்முறை தவறவிட்டால்… இந்திய அணியை எச்சரிக்கும் ரவி சாஸ்திரி!

உலகக் கோப்பையை இம்முறை தவறவிட்டால் மீண்டும் 12 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என இந்திய அணியை முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார்.

இந்தியா
இந்தியா

நடப்பு உலகக் கோப்பை தொடரில் வெல்ல முடியாத அணியாக இந்திய அணி திகழ்கிறது. 8 போட்டிகளில் விளையாடி, 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கில் ரோகித் ஷர்மா, விராட் கோலி என ஒரு பக்கம் அதிரடி காட்ட, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் என பந்து வீச்சில் எதிரணி வீரர்களை திணறிடித்து வருகிறார்கள். இம்முறை இந்திய அணியின் அபார ஆட்டத்தை கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இணைய உரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் திறமையை வெகுவாக புகழ்ந்தார். ஆடம் கில்கிறிஸ்ட், மைக்கேல் வான் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய சாஸ்திரி, ‘’12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை தவற விட்டால்,

இந்திய அணி மேலும் 12 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்படலாம். 7-8 வீரர்கள் தங்களது முழு திறனுடன் உள்ளனர். இந்த உலகக் கோப்பை தொடர் அவர்களுக்கு கடைசி தொடராக இருக்கும் என்பதால், இருக்கும் சாதகமான சூழலை பயன்படுத்தி அவர்கள் உலகக் கோப்பை கைப்பற்ற வேண்டும்’’ என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in