கொல்கத்தா மைதானத்தில் மழை... ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா போட்டி நடக்குமா?

கொல்கத்தா மைதானத்தில் மழை... ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா போட்டி நடக்குமா?

கொல்கத்தாவில் மழை பெய்து வருவதால் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நடைபெறவுள்ள ஈடன் கார்டன் மைதானப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், மழை நிற்காமல் தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படும். இரண்டாவது அரையிறுதியில் வெற்றிபெறும் அணி, அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in