குறுக்கிட்ட மழை... நியூசிலாந்து 402 ரன் குவித்தும் வீண்; டிஎல்எஸ் விதியால் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!

குறுக்கிட்ட மழை... நியூசிலாந்து 402 ரன் குவித்தும் வீண்; டிஎல்எஸ் விதியால் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!
Updated on
2 min read

மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ். விதிப்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்த போது, கான்வே 35 ரன்களில் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பிறகு ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து கொண்ட வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் அரைசதம் அடித்தனர். கேன் வில்லியம்சம் 95 ரன்களில் தனது ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ரச்சின் ரவீந்திரா 108 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் மற்றும் மார்க் சாப்மென் முறையே 29 மற்றும் 39 ரன்களை ரன்களை எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது.

இதையடுத்து 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை பாகிஸ்தான் துரத்தியது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் அவுட் ஆக, இவருடன் களமிறங்கிய ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களை எடுத்தார். 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்த நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும், டி.எல்.எஸ். விதிகளின் படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in