சென்னையில் இன்றும், நாளையும் 66 மின்சார ரயில்கள் ரத்து: காரணம் என்ன?

மின்சார ரயில்
மின்சார ரயில்

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து அம்பத்தூா் வழியாக செல்லும் 66 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்சார ரயில்
மின்சார ரயில்

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், " பட்டாபிராம் மற்றும் அம்பத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம், பட்டாபிராம், திருவள்ளூா், திருத்தணி செல்லும் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதன்படி சென்னை சென்ட்ரலில் சனிக்கிழமை இரவு செல்லும் 6 ரயில்களும், அரக்கோணம், திருத்தணியிலிருந்து இரவு புறப்படும் தலா ஒரு ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை சென்ட்ரலில் பட்டாபிராமுக்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரயிலும், அரக்கோணத்திலிருந்து சென்ட்ரலுக்கு இரவு 7.55 மணிக்கு வரும் ரயிலும் ஆவடியுடன் நிறுத்தப்படும். தொடா்ந்து, சென்னை சென்ட்ரல், கடற்கரை - ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி, பொன்னேரி இடையே அதிகாலை முதல் காலை 10 மணி வரை இயக்கப்படும் 58 மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள்

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரலிலிருந்து திருத்தணிக்கு அதிகாலை 3.30, காலை 7.40 மணிக்கும், பட்டாபிராமுக்கு அதிகாலை 4.15 மணிக்கும், திருவள்ளூருக்கு அதிகாலை 4.30, காலை 8.40, 9.15, 10 .00 மணிக்கும், அரக்கோணத்துக்கு காலை 6.30, 7.00, 8.20, 9.10, 9.50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மறுமாா்க்கமாக அரக்கோணத்திலிருந்து காலை 5.25, 6.20, 6.40, 7.10, 8.00, 8.50 மணிக்கும், ஆவடியிலிருந்து அதிகாலை 3.50, 4.25, 4.35, காலை 6.40 மணிக்கும், திருத்தணியில் இருந்து காலை 6.30, 7.00, 8.50 மணிக்கும், திருவள்ளூரிலிருந்து காலை 6.50, காலை 7.15, காலை 7.40, காலை 9.10, காலை 9.25 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in