அதிர்ச்சி; திருச்சியில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 7 பேர் படுகாயம்!

விபத்திற்குள்ளான பேருந்து
விபத்திற்குள்ளான பேருந்து

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. பேருந்தை விருதுநகரைச் சேர்ந்த மாரிசாமி என்பவர் ஓட்டினார்.

மீட்பு நடவடிக்கை
மீட்பு நடவடிக்கை

பேருந்து செட்டியாபட்டி- கோரையாற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, லாரி ஒன்றை முந்துவதற்கு முற்பட்டது. அப்போது, பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதைத்தொடர்ந்து பின்னால் வந்த இரண்டு தனியார் பேருந்துகளும் மோதின.

இதையடுத்து பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நெடுஞ்சாலையில் வந்த லாரி ஒன்று மூன்றாவது பேருந்தின் பின்புறம் மோதியது. மழை பெய்து கொண்டிருந்ததால், மேலும் இரண்டு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து மோதின.

விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கை
விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கை

மொத்தமாக 5 பேருந்துகள், ஒரு லாரி என ஆறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில், பேருந்துகளில் பயணித்த ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு திருச்சியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், 30-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தால் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in