உலகக் கோப்பை கால்பந்து தொடர்; தேதிகள் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

உலகக் கோப்பை கால்பந்து தொடர்
உலகக் கோப்பை கால்பந்து தொடர்

2026ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் தேதி மற்றும் மைதானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர்
உலகக் கோப்பை கால்பந்து தொடர்

சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்ட விளையாட்டு போட்டியில் முதல் இடத்தில் இருப்பது கால்பந்து போட்டிகள். சர்வதேச போட்டிகளானாலும் சரி, கிளப் போட்டிகளானாலும் சரி மற்ற விளையாட்டுக்களால் நெருங்க முடியாத ரசிகர்களும், வருமானமும் கொடுக்கக்கூடியதாக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. கால்பந்து தொடர்கள் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது உலகக் கோப்பை தொடரே. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தொடரில், 6 பிராந்தியங்களில் இருந்து தேர்வாகும் 48 அணிகள் கலந்துகொண்டு விளையாடும்.

உலகக் கோப்பை கால்பந்து தொடர்
உலகக் கோப்பை கால்பந்து தொடர்

இந்நிலையில், 23வது மற்றும் 2026ம் ஆண்டிற்கான ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்த போட்டி தொடருக்கான தேதிகள் மற்றும் மைதானங்களின் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி இத்தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது. மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரில் இந்த போட்டி நடைபெறும். இத்தொடரின் இறுதிப்போட்டி 2026ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி நியுயார்கில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர்  தேதி அறிவிப்பு
உலகக் கோப்பை கால்பந்து தொடர் தேதி அறிவிப்பு

குரூப் சுற்று தொடங்கி, இறுதிப் போட்டி வரை மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில், கால்இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடத்தப்பட உள்ளது. 3 நாடுகளிலும் சேர்த்து மொத்தமாக 16 நகரங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 1994ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் கால்பந்து போட்டிகள் வட அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in