இதுவே முதல்முறை! துபாயில் ஐபிஎல் ஏலம்… உறுதி செய்தது பிசிசிஐ!

ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் ஏலம்

2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் துபாயில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா அல்லாத வேறு நாட்டில் இந்த ஏலம் நடத்தப்படுவது இதுவே முதல்முறை.

ஐபிஎல் தொடருக்காக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலமும், ஆண்டிற்கு ஒருமுறை மினி ஏலமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மினி ஏலம் துபாயில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அந்த தகவலை பிசிசிஐ இதுவரை உறுதிப்படுத்தாமல் இருந்தது.

இந்நிலையில், ஏலம் நடக்கும் தேதியையும், அரங்கையும் பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபில் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. கோக கோலா அரேனாவில் இந்த ஏலம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய வேகப்பது வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். அதேநேரம், லக்னோ அணிக்காக விளையாடி வந்த மேற்கு இந்திய வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் அந்த அணியில் இருந்து மும்பை அணிக்கு செல்கிறார். அவர் கடைசியாக 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அதே ஊதியத்திற்கு அவர் மும்பை அணிக்காக விளையாட உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளி போனஸ்... ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்த நிறுவன உரிமையாளர்!

நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!

9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!

என்னை பலமுறை சாகடிச்சுட்டாங்க... நடிகர் விக்ரம் பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in