என்னை பலமுறை சாகடித்து விட்டார்கள்: அதிர்ச்சி தந்த நடிகர் விக்ரம் பிரபு!

நடிகர் விக்ரம் பிரபு
நடிகர் விக்ரம் பிரபு

என்னை பலமுறை சாகடித்து விட்டார்கள் என நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் பிரபு தற்போது அதிக அளவிலான நெகட்டிவிட்டி பரவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். கன்டென்ட்டுக்காக என்னையே இரண்டு, மூன்று முறை சாகடித்து விட்டார்கள். அப்படி வெளியான வீடியோகூட யூடியூபில் பல மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. நான் எப்போதும் நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன் என நம்புகிறேன்.

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா
விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா

இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் 'ரெய்டு' கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in