நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம்… டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு!

இந்தியா - நெதர்லாந்து
இந்தியா - நெதர்லாந்து

நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 45வது மற்றும் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி தற்போது களமிறங்கி விளையாட உள்ளது.

இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில், 8-லும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நெதர்லாந்து அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 2ல் வெற்றியும், 6ல் தோல்வியையும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

உலக கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் தோல்வியே அடையாதா அணி என்ற சாதனையை இந்திய அணி பெறக்கூடும்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in