என் வாழ்க்கையில் விளையாடி விட்டார்... இளம்பெண் புகாரால் இந்திய ஹாக்கி வீரர் மீது வழக்கு!

இந்திய ஹாக்கி  வருண் குமார்
இந்திய ஹாக்கி வருண் குமார்

திருமணம் செய்து கொள்வதாக் கூறி ஐந்து ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் பெங்களூருவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையம்
பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையம்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையத்தில் 22 வயது இளம்பெண் நேற்று புகார் செய்தார். அதில், " 2017-ம் ஆண்டில், சாய் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியன் கோச்சிங் சென்டரில் வாலிபால் பயிற்சிக்காக 16 வயதில் பயிற்சியில் சேர்ந்தேன்.

அதே பயிற்சி மையத்தில் வருண் குமார் 2018-ம் ஆண்டில் பயிற்சிக்காக வந்தார். என்னிடம் பழகுவதற்காக வருண்குமார் இன்ஸ்டாகிராம் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் பலமுறை முயன்றார். ஆனால், நான் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்திய ஹாக்கி  வருண் குமார்
இந்திய ஹாக்கி வருண் குமார்

என்னைத் திருமணம் செய்வதாக அவர் உறுதியளித்த பின்னரே அவரை சந்தித்தேன். 2019-ம் ஆண்டு, வருண் என்னை ஜெயநகரில் இரவு உணவிற்கு அழைத்துச் சென்று ஓட்டல் அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

நான் மைனர் என்று தெரிந்தும் தொடர்ந்து என்னுடன் பாலியல் உறவில் ஐந்து வருடங்களாக ஈடுபட்டார். ஆனால், கடந்த ஒரு வருடமாக வருண் குமார் என்னைத் தவிர்த்து வருகிறார். அத்துடன் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறுகிறார். தனிப்பட்ட என்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்" என்று புகாரில் கூறியுள்ளார்.

போக்சோ
போக்சோ

இதையடுத்து இந்திய ஹாக்கி வீரர் வருண் குமார் மீது குழந்தைகள் பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வருண் குமாரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் செய்து கொள்வதாக ஐந்து ஆண்டுகளாக இளம்பெண்ணை ஏமாற்றி இந்திய ஹாக்கி வீரர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in