இந்தியா அபார வெற்றி... 2வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி!

2வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
2வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கடந்த 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 253 ரன்களும் இந்திய அணி எடுத்திருந்தது.

2வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
2வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 255 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அந்த அணிக்கு வெற்றி பெற 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மட்டும் நிலைத்து நின்று ஆடி 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்த ஆட்டம் இழந்து வெளியேறினர். இறுதியில் பென் ஃபோக்ஸ் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 36 ரன்கள் அடித்து ஓரளவுக்கு ரன்கள் சேகரித்தனர்.

2வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
2வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்திய அணி தரப்பில் 2வது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 3வது டெஸ்ட் போட்டி வருகிற 15ம் தேதி குஜராத் மாநிலம் சௌராஷ்டிராவில் துவங்க உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in