இந்தியா – பாகிஸ்தான் போட்டி... இன்னிங்க்ஸ் பிரேக்கில் 10 நிமிட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

இந்தியா, பாகிஸ்தான்  அணி கேப்டன்கள்
இந்தியா, பாகிஸ்தான் அணி கேப்டன்கள்

கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 5-ம் தேதி தொடங்கி, இதுவரை 10 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியா பங்குபெற்ற ஆட்டங்களின் போது மட்டுமே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

அர்ஜித் சிங்
அர்ஜித் சிங்

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி ரத்து செய்யப்பட்ட உலகக் கோப்பை விழா நாளை(அக்.14) இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்னர் அகமதாபாத் மைதானத்தில் நடத்தப்பட உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த நிகழ்ச்சிக்காக நரேந்திர மோடி மைதானம் சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

சங்கர் மகாதேவன்
சங்கர் மகாதேவன்

இதில் பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், அரிஜித் சிங், சுக்விந்தர் சிங் ஆகியோரது இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நிலையில், இந்த இசை நிகழ்ச்சி பிற்பகல் 12.30 மணிக்கு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, போட்டியின் இடையே இன்னிங்ஸ் பிரேக்கின் போது 10 நிமிட நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுக்விந்தர் சிங்
சுக்விந்தர் சிங்

இந்த நிகழ்ச்சிக்கும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்கும், சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வருண் தவான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம்
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம்

1 லட்சத்து 32 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்திற்கு, பல்வேறு பிரபலங்களும் வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அகமதாபாத், குஜராத் போலீஸார், தேசிய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர் உள்பட மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள்  அதிர்ச்சி!

இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!

மனைவி தற்கொலை... விரக்தியில் உயிரையிழந்த கணவர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in