மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட சமந்தா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை சமந்தா
நடிகை சமந்தா
Updated on
1 min read

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போன்ற புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயோசிடிஸ் நோய்க்காக நடிகை சமந்தா தற்போது வெளிநாட்டில் தனது அம்மாவுடன் தங்கி தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா புகைப்படங்கள், ரீல்ஸ் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என பிஸியாகவே இருக்கிறார். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து கையில் ஸ்ட்ரிப் ஏற்றி இருக்கும் புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சமந்தாவின் மருத்துவமனை பதிவு...
சமந்தாவின் மருத்துவமனை பதிவு...

இதற்கான காரணத்தையும் சமந்தா அந்தப் புகைப்படத்திலேயே பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, ‘என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். இந்த சிகிச்சை மூலம் , ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிப்பு, தசை வலிமை, வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறன், எலும்புகளுக்கு வலிமை போன்ற பலன்கள் கிடைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா
சமந்தா

சமந்தா விரைவில் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் தெரிவித்து வருகிறார்கள். மயோசிடிஸ் சிகிச்சைக்காக சமந்தா தொடர்ந்து அதிக டோஸ் ஸ்டிராய்டு எடுத்து கொண்டதால், அவரின் தோலின் நிறம் மாறிவிட்டதாக சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in