இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா?: இன்று விறுவிறுப்பான போட்டி!

இந்தியா - இலங்கை அணி
இந்தியா - இலங்கை அணி

உலகக் கோப்பை தொடரின் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காமல் வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த வெற்றியைத் தொடரவும், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெறும் முனைப்புடனும் இந்தியா களமிறங்க உள்ளது.

இலங்கை அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2ல் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணிக்கு மிகச்சிறிய அளவு அரையிறுதிக்கான வாய்ப்பு உள்ளதால், அதை கணக்கில் கொண்டு களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in