ஐசிசி தரவரிசைப் பட்டியல்: அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி முதலிடம்!

இந்திய அணி
இந்திய அணி

ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி அனைத்துவிதமான போட்டிகளிலும் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என பலம் வாய்ந்த அனைத்து அணிகளையும் இந்தியா பெரும் ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், ஐசிசி புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணி
இந்திய டெஸ்ட் அணி

டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் 118 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலும், அதே 118 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. 115 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 4வது இடத்திலும் உள்ளன.

இந்திய ஒருநாள் அணி
இந்திய ஒருநாள் அணி

ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் இந்தியா 121 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. 111 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 3வது இடத்திலும், 111 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 4வது இடத்திலும், 102 புள்ளிகளுடன் நியூசிலாந்து 5வது இடத்திலும் உள்ளன.

இந்திய டி20 அணி
இந்திய டி20 அணி

டி20 போட்டிகளில் 265 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 259 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2ம் இடத்திலும் உள்ளன. 255 புள்ளிகளுடன் நியூசிலாந்து 3வது இடத்திலும், 252 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், 251 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன.

வீரர்களுக்கான பட்டியலில் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்களில் முகமது சிராஜ் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.

டி20 போட்டி பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in