உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா - ரன்னர் இந்தியாவுக்கு பரிசுத்தொகை எவ்வளவு?

உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா - ரன்னர் இந்தியாவுக்கு பரிசுத்தொகை எவ்வளவு?

உலக கிரிக்கெட் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணிக்கு, வெற்றிக் கோப்பையுடன் ரூ.33 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. ரன்னா் அப்-ஆக வந்த இந்திய அணிக்கு ரூ.16 கோடி கிடைத்தது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, ரன்னர் பட்டம் பெற்ற இந்தியா உள்ளிட்ட 10 அணிகளுக்கு பரிசுத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி 240 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதனை எளிதாக சேஸிங் செய்த ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதையடுத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையும், வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதேபோன்று ரன்னர் டைட்டில் பெற்ற இந்திய அணி வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 33 கோடி ஆகும்.

இதேபோன்று ரன்னர் பட்டம் பெற்றுள்ள இந்திய அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 16 கோடி) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6.50 கோடி பரிசுத் தொகையும், லீக் சுற்றுடன் வெளியேறிய 6 அணிகளுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ. 83 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று லீக் சுற்றில் வெற்றி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் ஒரு வெற்றிக்கு தலா 33 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை தனியாக வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்திய அணிக்கு தனியாக மூன்று கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக வென்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டிருக்கிறது. இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் தொடர்ந்து பத்து போட்டிகளில் அசத்திய இந்திய அணி கடைசியாக வெற்றி பெற வேண்டிய இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

பரிதாபமாக அமர்ந்திருந்த விராட் கோலி இந்த போட்டியில் இந்தியா தோற்றத்திற்கு காரணம் ஆடுகளம் மோசமான முறையில் அமைக்கப்பட்டது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து பத்து போட்டிகளில் இந்திய அணி ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடிவிட்டு கடைசியில் இதுபோல் ஒரு மோசமான ஆடுகளத்தில் விளையாடியதால் தான் இந்திய அணி தோற்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in