விதிமுறை மீறி கேப்டன்ஷிப்... ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 33வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் நேற்று மோதின. முல்லான்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 193 ரன்களை எடுத்தது. இதில், ரோகித் சர்மா 36, சூரியகுமார் யாதவ் 78, திலக் வர்மா 34 ரன்கள் எடுத்திருந்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 183 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிப் பெற்று, புள்ளிப்பட்டியலில் மும்பை 7 வது இடத்திற்கு முன்னேறியது. இதுவரையில் நடந்த 7 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே ஹெர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

மும்பை - பஞ்சாப் போட்டி
மும்பை - பஞ்சாப் போட்டி

இந்த தொடரில் இதுவரை விளையாடிய 7 போட்டியிலும் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே சிறப்பாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கியதால் அதிருப்தியில் இருந்து வரும் மும்பை அணி ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகளால் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்து குட்டு வைத்துள்ளது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

அதாவது பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 20 ஒவர்களை வீசி முடிக்காத மும்பை அணி, 18 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது மும்பையின் முதல் தவறு என்பதால் கேப்டன் பாண்டியாவுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in