செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை திடீரென சந்தித்து பாராட்டிய தொழிலதிபர் அதானி!

பிரக்ஞானந்தாவை பாராட்டிய தொழிலதிபர் அதானி.
பிரக்ஞானந்தாவை பாராட்டிய தொழிலதிபர் அதானி.

அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி இந்தியாவின் வளர்ந்து வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இன்று சந்தித்தார்.

செஸ் வீரர் பிரக்ஞானந்தா
செஸ் வீரர் பிரக்ஞானந்தா

அதானி குழுமத் தலைவரும், தொழிலதிபருமான கௌதம் அதானி இந்தியாவின் வளர்ந்து வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இன்று சந்தித்தார். இதுகுறித்து அதானி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரக்ஞானந்தா செஸ் உலகில் தொடர்ந்து பதக்கங்களை வென்று இந்தியாவை பெருமைப்படுத்துவதால் அவருக்கு ஆதரவளிப்பது ஒரு பாக்கியம்.

நமது தேசத்தின் மகத்துவத்தைக் கொண்டாட மேடையில் நிற்பதைவிட, திருப்திகரமானது எதுவுமில்லை என்று, எண்ணற்ற இளம் இந்தியர்கள் நம்புவதற்கு பிரக்ஞானந்தாவின் வெற்றி உத்வேகம் அளிக்கிறது. பிரக்ஞானந்தா என்பது இந்தியாவால் என்ன செய்ய முடியும், என்னவாக இருக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.

அஜர்பைஜானின் பாகுவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி, உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தோற்கடித்து சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு உலகக் கோப்பை பட்டத்தை வென்றார். கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்ஷுவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் அணி போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வின்சென்ட் கீமர் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் உலகின் சிறந்த ஜூனியர் வீரர்களாக உள்ளதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) அறிவித்துள்ளது.

19 வயதான ஜெர்மனின் வின்சென்ட் கீமர், 18 வயதான இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆகியோர் ஃபிடேவின் 2024 ஜனவரி தரவரிசைப் பட்டியலில் இருவரும் தலா 2743 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் குக்கேஷ் தொம்மராஜு, விதித் குஜராத்தி, பிரக்ஞானந்தா ஆகியோர் ஃபிடே கேண்டிடேட் செஸ் தொடரில் இந்த ஆண்டு பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in