விஜயின் அரசியல் மாஸ்டர் பிளான்... பிரம்மாண்ட மாநாட்டில் கட்சி அறிவிப்பு?

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் பிரம்மாண்டமான மாநாடு நடத்தி இந்த வருடம் கட்சியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய். கடந்த வருடத்தில் வெளியான அவரது 'பீஸ்ட்', 'வாரிசு', 'லியோ' படங்கள் சுமாராக ஓடினாலும் வசூல் ரீதியாக வெற்றியே ஈட்டித் தந்தது. இந்த நிலையில்தான், பள்ளிப் படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது, இரவு நேர பாடசாலை, இலவச சட்ட ஆலோசனை மையம் போன்றவற்றை முன்னெடுத்தார் விஜய்.

மேலும், சமீபத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கும் நேரிடையாகச் சென்று உதவித் தொகையையும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். இந்த விஷயம்தான் விஜய் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. அரசியலுக்கு வருகிறேன் என்பதை இப்படி மறைமுகமாகச் சொல்லி ரஜினி போல வராமல் போய் விடுவாரோ என்ற பயமும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இதைப் போக்கத்தான் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார். பிரம்மாண்டமான மாநாடு நடத்தி அதில் தனது புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறாராம் விஜய். ஆனால், கட்சித் தொடங்கிய உடனே அவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் சொல்லப்படுகிறது. தனது அடித்தளத்தை இன்னும் வலுப்படுத்திக் கொண்ட பின்பே அவர் தேர்தலில் களமிறங்க இருக்கிறாராம். விஜய் இப்போது 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து இன்னும் ஓரிரு படங்களில் நடித்தபல் பின்பே முழுநேர அரசியல் குறித்து முடிவெடுப்பார் எனவும் தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in