இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்... இந்திய அணி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியும், போட்டி நடைபெறும் மைதானங்கள் எவை என்பது குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில், ஜஸ்பிரித் பும்ரா(துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கேஎல் ராகுல், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருப் ஜூரேல் (கீப்பர்), கேஎஸ் பரத்(கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை.

விராட் கோலி
விராட் கோலி

மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருந்த கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உடற் தகுதியின் அடிப்படையில் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in