அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

அரபிக்குத்துப் பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடி இணையத்தைக் கலக்கி இருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘தி வாரியர்’ படம் மூலமாக புல்லட் பேபியாக தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை கீர்த்தி ஷெட்டி, படம் பெரியளவில் ஹிட்டடிக்காவிட்டாலும் இவரது நடனம் ரசிகர்களை வசீகரிக்க, பிரபலமடைந்தார். ’தி வாரியர்’ படத்தில் கீர்த்தியை தேர்ந்தெடுக்க அவரது துள்ளலான நடனமும் ஒரு காரணம் என முன்பு சொல்லி இருந்தார் இயக்குநர் லிங்குசாமி.

‘தி வாரியர்’, நாகசைதன்யாவுடன் ‘கஸ்டடி’ படங்களை அடுத்து, பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படம் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இடையில் சூர்யா-பாலா மனக்கசப்பால் கீர்த்தி ஷெட்டி 'வணங்கான்’ படத்திற்கு கொடுத்த தேதிகள் மிஸ் ஆக, அந்தப் படத்தில் இருந்து விலகினார்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட கீர்த்தி ஷெட்டி இப்போது ‘பீஸ்ட்’ படத்தில் டிரெண்டான ‘அரபி குத்து’ பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடியிருக்கிறார். தான் கோரியோகிராஃப் செய்த முதல் பாடல் எனக் கூறி இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி. கீர்த்தியின் இந்த பெல்லி டான்ஸில் சொக்கிப் போன ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in