இந்திய வில்லாளர்கள்
இந்திய வில்லாளர்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டி... ஒரே நாளில் இரட்டைத் தங்கம் வென்ற இந்திய வில்லாளர்கள்!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய வில்வித்தை வீரர்கள், இன்று ஒரே நாளில் இரட்டைத் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சீனாவில் நடைபெற்றும் வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வில்வித்தை வீரர்கள், இரட்டை தங்கம் வென்றதன் மூலம் இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் வில்வித்தை வீரர்கள், சீனாவின் ஹாங்சோவில் உள்ள ஃபுயாங் யின்ஹு விளையாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற வில்வித்தைக்கான இறுதிப் போட்டிகளில் பங்கேற்றனர். ஜோதி வென்னம், அதிதி சுவாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணியில் அடங்கி இருந்தனர். ஓஜாஸ் பிரவின் தியோட்டலே, அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் சமாதான் ஜாவ்கர் ஆகியோர் ஆண்கள் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

இந்தியாவின் ஆண்கள் அணி, தென் கொரியாவை 235-230 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தது. அதே போன்று இந்தியாவின் பெண்கள் அணியினர், சீன தைபே அணியை 230-229 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பதக்கங்களை தட்டிப் பறித்தனர்.

கூட்டு வில்வித்தையின் கலப்பு குழு போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த பிறகு, ஹாங்சோ வில்வித்தையில் இந்தியா பெற்ற மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். மேலும் ஒரே நாளில் இரட்டை தங்கம் வென்ற வகையில், இந்திய வில்லாளர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in