தொடங்கியது ஐபிஎல் திருவிழா... டாஸ் வென்று பேட்டிங் செய்யும் ஆர்சிபி அணி; வெல்லுமா சென்னை?

இரு அணி கேப்டன்கள்
இரு அணி கேப்டன்கள்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி HR Ferncrystal

இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு அணியில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டு வீரர்களும் இணைந்து விளையாடுவதால், இந்த தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின், 17வது சீசன் இன்று தொடங்கியது . இதன் தொடக்க விழாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கான வான வேடிக்கை காட்டப்பட்டது. மேலும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தல தோனிக்காக பத்து தல படத்தில் இருந்து நீ சிங்கம்தான் பாடலை ஏர்.ஆர்.ரஹ்மான் பாடினார். அப்போது கரகோஷம், விசில் சத்தம் விண்ணை முட்டியது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளையாடுகின்றன. 6வது முறையாக கோப்பையை வெல்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில், 2008ம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்த முடியாமல் தவிக்கும் பெங்களூரு அணி, பழி தீர்க்க களமிறங்கியுள்ளது. இந்த 2 அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் 20ல் சென்னையும், 10ல் பெங்களூரு வெற்றிப் பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்நிலையில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து, ஆடி வருகிறது.

சிஎஸ்கே - ஆர்சிபி கேப்டன்கள்
சிஎஸ்கே - ஆர்சிபி கேப்டன்கள்

சிஎஸ்கே அணி: ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), தோனி(விக்கெட் கீப்பர்), டிவான் கான்வே, ரஹானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, அவனிஷ்ராவ் ஆரவெல்லி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னெர், மொயீன் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்குர், டேரில் மிட்செல், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், தீபக் சாஹர், தீக்ஷானா, முகேஷ் சவுத்ரி, முஸ்தாபஜூர் ரகுமான், பிரசாந்த், சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், சவுரவ் சவுகான், மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், கரண் ஷர்மா, கேரூன் கிரீன், ஸ்வப்னில் சிங், மயங்க் தாகர், மனோஜ் பண்டாகே, ஆகாஷ் தீப், அல்ஜாரி ஜோசப், லோக்கி பெர்குசன், முகமது சிராஜ், யாஷ் தயாள், டாம் கர்ரன், ரீஸ் டாப்லே, ஹிமான்ஷூ ஷர்மா, வைஷாக் விஜய் குமார், ராஜன் குமார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள், டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஜியோ சினிமா செயலியிலும் போட்டியை பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

அர்விந்த் கேஜ்ரிவாலால் மிகவும் வருத்தப்படுகிறேன்.... மனம் திறந்தார் குருநாதர் அன்னா ஹசாரே!

நடிகை மகாலட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்!

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்... தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

தயாநிதி மாறனை எதிர்த்து பிரேமலதா போட்டி?: பரபரப்பில் மத்திய சென்னை தேர்தல் களம்!

போதை ஊசியால் இளைஞர் உயிரிழப்பு... சென்னையில் தொடரும் சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in