ரசிகர்கள் அதிர்ச்சி... மைதானத்தில் அலறித் துடித்த நட்சத்திர வீரர் நெய்மர்!

காயமடைந்த நெய்மர்
காயமடைந்த நெய்மர்

2026ம் ஆண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தென்னமெரிக்க நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் - உருகுவே அணிகள் மோதின. உருகுவே தலைநகர் மாண்டேவீடியோவில் நடைபெற்ற போட்டியில் பிரேசில் அணியை 2-0 என்ற கணக்கில் உருகுவே வீழ்த்தியது.

இந்த போட்டியின் முதல் பாதியின் கூடுதல் நேரத்தின் போது பந்தை விரட்டி சென்ற பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மரை உருகுவே வீரர் நிகோலஸ் டி குரூஸ் தள்ளியதில், அவர் கீழே விழுந்தார். இதில் காலில் பலத்த காயமடைந்த நெய்மர் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து, உடனடியாக அவரை மருத்துவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நெய்மர் பாதியிலேயே வெளியேறியதை அடுத்து உருகுவே அணி எளிதாக வெற்றி பெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in