வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! நாளை முதல் மூடப்படுகிறது நாவலூர் சுங்கச்சாவடி!

நாவலூர் சுங்கச்சாவடி
நாவலூர் சுங்கச்சாவடி

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மிகப்பெரிய சுங்கச்சாவடியான நாவலூர் சுங்கச்சாவடி நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ சேவையை மேம்படுத்தும் விதமாக சென்னை கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையில் மெட்ரோ ரயில் சேவையை வழங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வருவதால் பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியை மூடுவதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் மாநில அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் சுங்கச்சாவடியில் பயனர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஓஎம்ஆர் குடியிருப்பு வாசிகள் முதல்வருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர் . மேலும் நாவலூர் சுங்கச்சாவடியில்  கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உள்ளூர் குடியிருப்போர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தது. மேலும் இந்த டோல்கேட் வழியாக பயணம் செய்யும் பொதுமக்கள் பலரும் பல காலமாக இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். 

தற்போது அவர்களின்  இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட இருக்கிறது. ஆனால் மெட்ரோ முடிக்கப்படும்போது மீண்டும் இந்த டோல் பிளாசா திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஏற்கெனவே ஆகஸ்ட் 2021ல் பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், சோளிங்கநல்லூர் சாலை மற்றும் இ சி ஆர்- ஓ எம் ஆர் இணைப்பு சாலை ஆகிய இடங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மேலும் தற்போது நாவலூர் சுங்கச்சாவடி மூடப்பட்டால் தினமும் 7 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in