சிஎஸ்கே அணி நிர்வாகம் உதவி செய்யவேண்டும்... மகள்களுக்காக அஸ்வின் வைத்த வேண்டுகோள்!

மகள்களுடன் அஷ்வின்
மகள்களுடன் அஷ்வின்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகள் கிடைத்தால் தனக்கு கொடுக்குமாறு இந்திய வீரர் அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தோனி கோலி
தோனி கோலி

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதுதான் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி என்பதால், இருதரப்பு அணி ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல் ரசிகர்களும் இப்போட்டிக்கான டிக்கெட்டை வாங்க அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக ஐபிஎல் தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், நடிகர்கள் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இதனை காணவும் பலர் திட்டமிட்டுள்ளனர்.

ஐபிஎல் டிக்கெட்
ஐபிஎல் டிக்கெட்

இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் திடீரென முடங்கியது. இதனை தொடர்ந்து சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் உடனடியாக தீர்ந்து விட்டதாக கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்கெனவே 18 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகம் மோசடி செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிகபடியான டிமாண்ட் உள்ளது. எனது மகள்கள் இருவரும் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். சென்னை அணி நிர்வாகம் உதவி செய்யவும்’ என்று பதிவிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வீரருக்கே டிக்கெட்டுகள் கிடைக்காமல் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினின் இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

திருமணம் செய்யலைன்னா தற்கொலை செய்துப்பேன்... இளைஞரை மிரட்டிய பெண் கைது!

தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 2 பேர் கைது!

அமெரிக்காவால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்... ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை!

'கடவுளே மன்னிச்சுடு... பவ்யமாக மன்னிப்புக் கேட்டு விட்டு கோயிலில் திருடிய திருடன்... வைரலாகும் வீடியோ!

பார்ட்டிகளில் பாம்பு விஷ போதை... பகீர் கிளப்பிய பிரபல யூடியூபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in