ஆறுதல் வெற்றிகூட இல்லை; மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி!

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலிய அணி
மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலிய அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றி, ஒயிட்வாஷ் சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் போட்டி தொடர் துவங்கி நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது. இதையடுத்து 3வது மற்றும் இறுதிப் போட்டி ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியா
3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் துவக்க ஆட்டக்காரர் அலிக் அதனாஸ் மட்டும் சற்று நேரம் தாக்குபிடித்து 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் அதன் பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி 24.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மோரிஸ் மற்றும் சம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

கோப்பையுடன் ஆஸ்திரேலியா அணி
கோப்பையுடன் ஆஸ்திரேலியா அணி

87 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் ஜாக் ப்ராசர், ஜோஸ் இங்க்லிஸ் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். ஜாக் 41 ரன்களில் ஆட்டமிழந்ததோடு, ஹார்டி 2 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் ஜோஸ் இங்க்லிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் சேர்த்து, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து வெற்றிக்கான 87 ரன்களை வெறும் 6.5 ஓவர்களில் எட்டினர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 9ம் தேதி துவங்குகிறது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in