வார்னர், மிட்செல் அதிரடி சதம்... பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்த ஆஸ்திரேலியா!

டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ்
டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ்

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடி பேட்டிங்கில் அசத்தியது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடங்கினர். முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும், 7 ஓவருக்கு பின்னர் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட இருவரும் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசினர். பாகிஸ்தான் வீரர்களால் இந்த இணையை எளிதில் பிரிக்க முடியவில்லை. அந்த அணியின் ஷாஹின் அப்ரிடி, ஹரீஷ் ராஃப் என 6 பந்து வீச்சாளர்கள் களமிறக்கப்பட்டும் கூட, இந்த இணை அசராமல் ஆடி இருவரும் சதம் அடித்தனர். 121 ரன் எடுத்த நிலையில் மிட்சல் மார்ஷ் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட் 259 ரன்னில்தான் வீழ்ந்தது. இதைத்தொடர்ந்து களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார். ஸ்டீவன் ஸ்மித் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 163 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணி 45வது ஓவரில் 340 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது. அதிரடியாக விளையாடிக் கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தது சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதிரடி ஆட்டக்காரர் ஸ்டோய்னிஸ் 15 ரன்னுடனும், லபுய்ஷேன் 1 ரன்னுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர். அந்த அணி எப்படியும் 350 ரன்களை கடக்கும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in