பிரபுதேவா டென்னிஸ் ப்ளேயர்; லியாண்டர் பயஸ் நடனக்கலைஞர்... சொன்னது யார் தெரியுமா?

லியாண்டர் பயஸ்
லியாண்டர் பயஸ்
Updated on
1 min read

நடனக்கலைஞர் பிரபுதேவாவை டென்னிஸ் வீரர் என்றும், டென்னிஸ் வீரர் பயஸை நடக்கலைஞர் என்றும் சிறுவன் ஒருவர் கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு டென்னிஸ் வீரர் பயஸ் நகைச்சுவை பதிலும் அளித்துள்ளார்.

டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸை பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். எனினும் இக்கால குட்டீஸ்களுக்கு அவர் யார் என்று தெரிய பெரிய வாய்ப்பில்லை. இதேபோல் நடனத்தில் அசத்தும் பிரபுதேவாவை பற்றி அறியவும் வாய்ப்பில்லை. இதன் விளைவாக இருவரைப்பற்றி அறியாத 6 வயது சிறுவன் ஒருவன் தனது பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பொருத்துக பிரிவில் லியாண்டர் பயசை தவறுதலாக நடன கலைஞர் என பொருத்தி இருந்தார். இதேபோல் பிரபுதேவாவை டென்னிஸ் வீரர் என்று பொருத்தி இருந்தார்.

இந்த படத்தை பிருத்வி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் நேற்று பகிர்ந்தார். அதில், பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிட்டு எதிர்திசையில் அவர்களின் தொழில்களுக்கு பொருத்த வேண்டும் என்ற பிரிவில் அந்த சிறுவன், லியாண்டர் பயசை தவறாக நடன கலைஞர் என பொருத்தி உள்ளார். இதேபோல் பிரபுதேவாவை டென்னிஸ் வீரர் எனவும் தவறாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அதைப்பார்த்த லியாண்டர் பயஸ், நகைச்சுவையாக பதில் அளித்தும் பதிவிட்டிருந்தார். அதாவது, சல்மான்கானின் நடன வீடியோ ஒன்றை பதிவிட்டு, அதில் சல்மான்கான் முகத்திற்கு பதிலாக தனது முகத்தை பொருத்தி, அவர் நடனம் ஆடுவது போன்று காட்சி இருந்தது. லியண்டர் பயஸின் இந்த பதிவு இணையத்தை தற்போது ஆக்கிரமித்து வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

அர்விந்த் கேஜ்ரிவாலால் மிகவும் வருத்தப்படுகிறேன்.... மனம் திறந்தார் குருநாதர் அன்னா ஹசாரே!

நடிகை மகாலட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்!

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்... தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

தயாநிதி மாறனை எதிர்த்து பிரேமலதா போட்டி?: பரபரப்பில் மத்திய சென்னை தேர்தல் களம்!

போதை ஊசியால் இளைஞர் உயிரிழப்பு... சென்னையில் தொடரும் சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in