மிசோரமில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் லால்டுஹோமா - வெள்ளிக்கிழமை பதவியேற்பு!

மிசோரமில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் லால்டுஹோமா - வெள்ளிக்கிழமை பதவியேற்பு!

ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டுஹோமா புதன்கிழமை காலை மிசோரம் ஆளுநர் ஹரிபாபுவை நேரில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான கடிதம் அளித்து உரிமை கோரினார்.

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த நவ7ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 4ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 40 இடங்களில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்கிற நிலை இருந்தது. இதில் ஆளும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவைப்படும் நிலையில் சோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களை பிடித்தது. இதையடுத்து ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது. இங்கே பாஜக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றது.

இந்த இயக்கத்தின் தலைவரான 74 வயது லால்டுஹோமா இருந்து வருகிறார். இவர் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் 1982-களில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாவலராக பணியாற்றினார். ஒய்வு பெற்றவுடன் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்தார். 2019-ம் ஆண்டு ஜோரம் மக்கள் இயக்கத்தினை துவக்கி மாநிலத்தில் செல்வாக்கு மிக்க ஒரு கட்சியாக வளர்த்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான லால்டுஹோமா புதன்கிழமை காலை ஆளுநர் ஹரிபாபுவை நேரில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான கடிதம் அளித்து உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து, லால்டுஹோமாவின் அமைச்சரவை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in