3 மணி நேரம் வெளுத்து வாங்கப்போகிறது மழை! சென்னைக்கு அடுத்த அதிர்ச்சி

3 மணி நேரம்  வெளுத்து வாங்கப்போகிறது மழை! சென்னைக்கு அடுத்த அதிர்ச்சி

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். வீடுகளில் மழைநீர் புகுந்து இருப்பதால் அன்றாட உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள் மின்னல் வேகத்தில் பணியாற்றி வந்தாலும் மக்கள் உணவின்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது.

வீடுகளில் தேங்கி இருக்கும் மழை நீரால் மின்சாரம் தடைப்பட்டு இருக்கிறது. படிப்படியாக மழை நீரை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசு ஆவின் பாலை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் மின்சாரம், பால் கேட்டு மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள், மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in