
கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றும், யூடியூப்பைப் பார்த்து சாம்பார் வைக்கலாம். ஆனால், குண்டு தயாரிக்கலாமா என ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’கேரள குண்டு வெடிப்பு சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. யூடியூப்பை பார்த்து சாம்பார் வைக்கலாம். ஆனால் குண்டு தயாரிக்கலாமா? எனவே, இணைதளங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் வந்துள்ளது.
குண்டு வெடிப்பின் மூலம் தான் எதிர்ப்பு மனநிலையை காண்பிக்க வேண்டும் என்ற மனநிலை பாரத தேசத்தில் இருக்கக் கூடாது. கேரளத்தை தொடர்ந்து தமிழகமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஏனெனில் குண்டுக்கள் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பது தமிழகத்திலும் ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை என்றார். சுதந்திர வீரர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, சுதந்திர வீரர்களுக்கு மரியாதைக் கொடுப்பது நல்லது தான். ஆனால், அதனை முன்பே செய்திருக்க வேண்டும். இப்போது தான் செய்கிறார்கள். தேசியத்தையும் திமுக மதிக்க வேண்டும் என்பதே எனது கருத்து’’ என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!