SSLC, +2 பொதுத்தேர்வில் வெற்றிக்கான முக்கிய குறிப்புகள்!

காமதேனு

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை. தேர்வுகளில் கலந்து கொள்ள மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராவது முக்கியம்.

ஹெல்த் ரொம்ப முக்கியம். எக்ஸாம் டைம்ல வெளி உணவுகளையும், பயணங்களையும் தவிர்த்திடுங்க. உடல் நலக்குறைவால் ஒரு வருஷத்தை வீணாக்காதீங்க.

படிப்பதற்காக தூக்கத்தைத் தவிர்க்காதீங்க. வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது சோர்வையும், சலிப்பையும் விரட்டும்.

படித்தவைகளை நினைவில் வைத்திருக்க, தூங்கும் முன் குறிப்புகளைப் படிக்கவும். காலையில் மீண்டும் ஒருமுறை குறிப்புகளைச் சரிபாருங்க.

MURALI KUMAR K

தேர்வு முடியும் வரை செல்போன் மற்றும் தொலைக்காட்சியை தவிர்ப்பது நல்லது.

வழக்கமான நேரத்தில் எழுந்திருங்கள். தேர்வுக்கு தேவையான பொருட்களை தயார் செய்யுங்கள்.

பரபரப்பை தவிர்த்திடுங்க. குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே ரிலாக்ஸாக பள்ளியை சென்றடைந்து விடுங்க.

தேர்வுக்கு முந்தைய 15 நிமிடங்களை திறமையாக பயன்படுத்துங்க. வினாத்தாளை கவனமாக படித்து பாருங்க.

உங்களுக்கு நன்கு தெரிந்த கேள்விகளுக்கான பதில்களை முதல் பக்கத்தில், தெளிவாகவும், திருத்தங்கள் இல்லாமலும் எழுதுங்க.

ஒவ்வொரு கேள்விக்கான விடைக்கும், அதற்கு ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் நேரத்தை ஒதுக்குங்கள்.

தேர்வில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஆல் த பெஸ்ட்!

-