70 கோடி வெச்சிருந்தா வரலாம்... வேட்பாளர்களுக்கு அதிமுக விதிக்கும் நிபந்தனை!

ஜெயலலிதா
ஜெயலலிதா

தமது கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு மளமளவென தொகுதிகள் எண்ணிக்கை இறுதி செய்து வருகிறது திமுக. அதிமுக தரப்போ இன்னமும், கொள்வாரின்றி கிடக்கிறது.

தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் முறைத்துக் கொண்டு அங்குள்ள கட்சிகள் தங்களை நோக்கி வரலாம் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறது அதிமுக. முக்கியமாக, காங்கிரசின் வரவை எதிர்நோக்குகிறது அந்தக் கட்சி.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு பெரிய கட்சிகள் யாரும் முன்வராத போதும் 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது அதிமுக.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுகவில் போட்டியிட முன்வருபவர்கள் 100 கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாவட்ட வாரியாக வேட்பாளர்களை தேடுகிறது அதிமுக. 100 கோடி ரூபாய் செலவழிக்க தயாராக இருப்பவர்கள், முதலில் 70 கோடி ரூபாயை தலைமைக் கழகத்தில் செலுத்த வேண்டுமாம். அதைப் பெற்றுக்கொண்டு சீட் உறுதியானதும் அவர்களுக்கு தலைமைக் கழகத்திலிருந்து 100 கோடி ரூபாயாக திருப்பிக் கொடுப்பார்களாம்.

இந்த நிபந்தனைக்கு உட்பட்டு பணத்தோடு வருபவர்கள் மட்டுமே வேட்பாளர் தேர்வில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்களாம். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், 100 கோடி ரூபாய் செலவழித்தும் ஒருவேளை ஜெயிக்கமுடியாமல் போனாலும் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் இவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்று உத்தரவாதம் தரப்படுமாம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா காலத்தில், அதிமுக வேட்பாளர்கள் முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை தலைமைக் கழகத்தில் செலுத்த வேண்டும். அந்தத் தொகையுடன் சேர்த்து வேட்பாளரின் மொத்த செலவுக்குமான தொகையையும் கட்சியே அவர்களுக்கு வழங்குமாம். ஆனால், இப்போது 70-க்கு 30 சிஆர் என்ற ரீதியில் பங்கு பேசப்படுவதால் எத்தனை பேர் போட்டிக்கு முந்துவார்கள் என்று தெரியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in