ஒட்டுமொத்த டாஸ்மாக்கையும் மூடுவோம்... கோவை பிரச்சாரத்தில் அண்ணாமலை உறுதி!

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம்
கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம்

“தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, கேரளாவில் உள்ளது போல் கள்ளுக்கடைகளை திறப்போம்” என கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, ஆனைகட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”பிரதமருக்கு பிடித்த பழங்குடி மக்கள் இருக்கும் ஆனைகட்டியில் இருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்கள் அதிகம் வந்து சேரும் இடம். வளர்ச்சி அனைத்துப் பகுதிகளுக்கும் வர வேண்டும். மலைப் பகுதிகளுக்கு சிறப்புத் திட்டங்களை மோடி மட்டும் தான் வைத்துள்ளார். இங்கு பள்ளிகளை அதிகப்படுத்தப்பட வேண்டும். மோடி வீடுகள், பைப் குடிநீர், எரிவாயு சிலிண்டர், ஆகியவை மலைவாழ் மக்களுக்கும் வந்து சேர வேண்டும்” என்றார்.

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம்
கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம்

மேலும், “செங்கல் சூலை விவகாரதில் குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டிவிடுகிறது திமுக. இவர்களே பிரச்சினையை ஆரம்பித்து வேறு ஒருவர் மீது பழி போடுகிறார்கள். ஆனைகட்டி போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள மரங்கள் எல்லாம் ஒரு வைரத்துக்குச் சமம். அதேசமயம் வளர்ச்சியும் இருக்க வேண்டும். இந்தியாவின் ஆதிக்குடி பழங்குடி தான். மோடி தான் பழங்குடியை சேர்ந்த பெண்ணை குடியரசு தலைவர் ஆக்கினர். மலைவாழ், பழங்குடி மக்களுக்கு பாதுகாவலன் மோடி தான்” என்றார்.

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம்
கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம்

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு டாஸ்மாக் கடையை மட்டும் மூடுவதற்கு நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எல்லா டாஸ்மாக்கையும் மூடத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் என நாம் கூற முடியாது. ஜனநாயக நாட்டில் குடிக்க உரிமை இல்லையா என்பார்கள். ஆனால், டாஸ்மாக்கில் இருப்பவை ஸ்பிரிட்கள். அவற்றை மூடிவிட்டு கள்ளுக்கடையை திறப்போம்.

குடி என்பது கிராமத்திற்குள் வந்து, பின்னர் வீட்டிற்குள் வந்து, பெண்களுக்கு மன உளைச்சலாக உள்ளது. அதனால் தான் கள்ளுக்கடைகளை திறந்து டாஸ்மாக்கை மூடுவோம் என்கிறோம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in