பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகள்  மனோன்மணி பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக தலைவருடன் டி.ஆர்.பி.ராஜா
திமுக தலைவருடன் டி.ஆர்.பி.ராஜா

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போது திமுகவின் பொருளாளராக இருப்பவர் டி.ஆர்.பாலு. திமுகவின் மிக மூத்த தலைவர். முன்னாள் முதல்வரான கருணாநிதியின் மிக நம்பிக்கைக்குரியவரான டி.ஆர்.பாலு, ஆரம்ப காலம் முதல் திமுகவுக்காக கடுமையாக உழைக்கக் கூடியவர். மத்திய அமைச்சராக சிறப்பாக பணியாற்றிய அவர், சேது சமுத்திரத் திட்டம், நான்கு வழி நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்.

தற்போதும் மக்களவையில் திமுகவின் குரலை அழுத்தமாக ஒலித்து, பாஜகவை கேள்விகளால் திணறடித்து வருகிறார். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுகவின் முயற்சியில் டி.ஆர்.பாலுவின் செயல்பாடுகளே பெரிதும் கை கொடுத்தன.  அந்த வகையில் தீவிரமாக திமுகவில் செயலாற்றும் டி ஆர் பாலுவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும்,  திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையிலும் டி.ஆர்.பாலுவின் மகளை பாஜகவில் இணைக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலுவின் முதல் தாரத்து மகள் மனோன்மணி. இவர் பாலு மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குடும்பத்தினருடன் இணக்கமாக இல்லை. அதனால் அவரை பாஜகவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. விரைவில் அவர் முறைப்படி பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு எதிராக இவரை முன்னிறுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யாவை  பாஜகவில் இணைத்து திமுகவுக்கு அதிர்ச்சி அளித்த பாஜக  தற்போது மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகள் மனோன்மணியை  பாஜகவில் இணைப்பதன் மூலம் திமுகவுக்கு நெருக்கடியை கொடுக்க திட்டமிட்டுள்ளது. இது திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in