நிற அவமரியாதையை இந்தியா பொறுத்துக்கொள்ளாது... சாம் பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி!

நிற அவமரியாதையை இந்தியா பொறுத்துக்கொள்ளாது... சாம் பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி!

இந்தியர்களின் நிறம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா. இவர் சமீபகாலமாக சர்ச்சையான கருத்துகளை கூறி வருகிறார். அதன்படி, இன்று காலை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போன்றும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போன்றும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போன்றும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போன்றும் இருக்கிறார்கள். இருப்பினும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்” என தெரிவித்துள்ளார்.

சாம் பிட்ரோடா
சாம் பிட்ரோடா

இந்தியர்களின் நிறம் குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம், வாரங்கல்லில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், "மிக நற்பெயரும், ஆதிவாசி குடும்பத்தின் மகளுமான திரவுபதி முர்முவைத் தோற்கடிக்க காங்கிரஸ் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறது என நான் நிறைய யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கான காரணத்தை இன்று தெரிந்துகொண்டேன். இளவரசரின் (ராகுல் காந்தி) தத்துவ வழிகாட்டியாக அமெரிக்காவில் ஒரு மாமா (சாம் பிட்ரோடா) இருக்கிறார்.

கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவரைப் போல, இளவரசர் மூன்றாவது நடுவரின் (சாம் பிட்ரோடா) ஆலோசனையைப் பெறுகிறார் என்றும் அறிந்தேன். கறுப்பு தோல் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என இந்த தத்துவ மாமா கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால், நாட்டின் பலதரப்பட்ட மக்களை, அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் நீங்கள் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்.

எனது நாட்டு மக்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் அவர்களை அவமரியாதை செய்யப்படுவதை எனது நாடு பொறுத்துக்கொள்ளாது. இதை மோடி ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்.” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in