நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சந்திரசேகர் ராவை சிறையில் தள்ளுவோம் - ஜே.பி.நட்டா ஆவேசம்!

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சந்திரசேகர் ராவின் ஊழல் குறித்து விசாரித்து சிறைக்கு அனுப்புவோம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், நாரயணபேட்டில் நேற்று நடந்த தேர்தல் பொது கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் சந்திரசேகர ராவ் அரசை தோற்கடிக்க வேண்டும். மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரையே முதல்வராக்குவோம். தெலங்கானா உருவான பிறகு கே.சந்திரசேகரராவ் குடும்பம் மட்டுமே பலனடைந்துள்ளது. தனி மாநிலத்தால் கிடைக்க வேண்டிய பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

கே.சி.ஆருக்கு காலேஸ்வரம் அணை திட்டம் ஏ.டி.எம் போல மாறிவிட்டது. கேசிஆர் ஊழலால் மேடிகட்டா தடுப்பணை இடிந்து விழுந்துள்ளது. மியாபூர் நிலங்களில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. தலித் பந்து திட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு 30 சதவீத கமிஷன் வழங்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்ததும், கே.சி.ஆரின் ஊழல்களை விசாரித்து சிறைக்கு அனுப்புவோம். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி ஏழைகளுக்கு செல்லவில்லை” இவ்வாறு அவர் பேசினார்.

ஜே.பி. நட்டா
ஜே.பி. நட்டா

தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் வரும் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிது. தெலங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. தெலங்கானா மாநிலம் உதயாமனது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in