நோட்டா... அரசியல் கட்சிகளை அச்சுறுத்தும் வாக்காளர் அஸ்திரம்; அதிக வாக்குகள் அதற்கு கிடைத்தால் என்னாகும்?

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா பொத்தான்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா பொத்தான்

வாக்குப்பதிவு நாளில் வாக்காளர் கையில் இருக்கும் அஸ்திரங்களில் ஒன்றாக ’நோட்டா’ என்பது விளங்குகிறது.

ஜனநாயக தேசத்தில் வாக்காளர் கையில் இருக்கும் ‘வாக்கு’ என்பதே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். அதனைப் பயன்படுத்தி அல்லாதோரை விலக்கி, நாட்டுக்கு நல்லவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பான வாய்ப்பு வாக்காளருக்கு கிடைக்கிறது. வாக்காளர் கையிலிருக்கும் இந்த அஸ்திரத்துக்கு அஞ்சியே அரசியல் கட்சிகள் தங்கள் செயல்பாடுகளை தீர்மானிக்கின்றன.

ஆனால் ஜனநாயக தேசத்தில் வாக்களிக்க விரும்பவில்லை என்பதும், சில தவிர்க்க இயலாத சூழல்களில் வாக்காளரின் உரிமையாக அமைந்து விடுகிறது. வாக்களிப்பது குடிமகனின் அத்தியாவசியக் கடமை என்றாலும், வாக்குப்பதிவு எந்திரந்தில் இடம்பெற்றிருக்கும் எந்த வாக்காளரையும் எனக்குப் பிடிக்கவில்லை என்று வாக்காளர் சொல்லும்போது, அவரை நிர்பந்திக்கவா முடியும்?

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

போட்டியிடும் வேட்பாளர்களில் எவரையும் தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஜனநாயக தேசத்தின் குடிமகனாக வாக்களிக்கும் கடமையை செய்தே தீருவேன் என்பவர்களுக்கு நோட்டா வரப்பிரசாதமாகிறது. வாக்குச்சாவடிக்கு செல்லாதோரின் வாக்குகள், கள்ள வாக்குகளாக மாறும் அபாயத்தை தவிர்க்கவும் வாக்காளர்களுக்கு நோட்டா உபாயம் கைக்கொடுக்கிறது.

இதன் அடிப்படையில் எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை’ (None of the Above - NOTA) என்பதும் வாக்குப்பதிவு எந்திரத்தில் சேர்க்கப்பட்டது. தனது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவர் மீதும் நம்பிக்கையில்லை; விருப்பமில்லை என்னும் வாக்காளர்கள், நோட்டா பொத்தானை அழுத்தி தங்களது ஜனநாயகக் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றலாம். இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் வேட்பாளர் பட்டியலில் கடைசியாக நோட்டாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக நோட்டா இடத்தில் ’49 ஓ’ என்பது இருந்தது. வேட்பாளர்களில் எவருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரியை அணுகி இந்தப் பிரிவின் கீழ் தங்களது ஆட்சேபத்தை பதிவு செய்யலாம். ஆனால் வாக்கு அளிப்பதற்கான ரகசியக் கொள்கையின் அடிப்படைக்கு ’49 ஓ’ எதிராக இருந்ததால், அதற்கு பதிலாக 2013-ல் நோட்டா வசதிக்கு வழி செய்யப்பட்டது. நோட்டாவுக்கு வாக்களிப்போர் ரகசியம் காக்கப்படும் என்பதால் இதற்கு வரவேற்பும் எழுந்தது.

2013-ல் நடைபெற்ற சத்தீஸ்கர், டெல்லி உட்பட 5 மாநிலத் தேர்தல்களில் நோட்டா வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்காடு இடைத்தேர்தல் மூலமாக தமிழகத்தில் அறிமுகமானது. நோட்டா விழிப்புணர்வு காரணமாக அது அறிமுகமான 2014 மக்களவை பொதுத்தேர்தலில் சுமார் 60 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்கு குவிந்தன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா

எவருக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்பதைக் கூட, ஒரு வாக்காக அளிக்க முடியும் என்பதால் தேர்தல் தோறும் வாக்காளர் மத்தியில் கவர்ச்சிகரமான உத்தியாக ‘நோட்டா’ விளங்குகிறது. வாக்காளர்களின் நோட்டா அஸ்திரத்துக்கு பயந்து, நாணயமான வேட்பாளரை நிறுத்த அரசியல் கட்சிகளை உந்தித்தள்ளியது. டெபாசிட் இழப்பதற்கு இணையாக, நோட்டாவுக்கு கீழ் வாக்குகளை பெறுவதை வேட்பாளர்கள் தவிர்க்கவே விரும்புகின்றனர்.

ஆனால் நோட்டா முறையில் வாக்களிப்பதில், வாக்காளரின் நோக்கத்தை பழுதாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை வீழ்த்தி நோட்டா வெற்றி பெற்றிருப்பின் என்னாகும்? அதாவது நோட்டாவுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருப்பின், அதற்கு அடுத்த நிலையில் அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்ற ஆபத்து காத்திருக்கிறது. நோட்டா அறிமுகமானது முதல் இம்மாதிரி விபரீதம் இதுவரை அரங்கேறவில்லை என்றபோதும், நோட்டா நோக்கத்துக்கு எதிராக இது இருப்பதாக விமர்சனங்கள் தொடர்கின்றன.

ஆகவே, வாக்களப் பெருமக்கள், தங்கள் தொகுதியின் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்ற அதிருப்தி எழுந்தாலும், தேர்தல் தினத்தன்று தங்களது வாக்கு மூலமாக அதனையும் பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு செல்வது அவசியமாகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in